4500 வருடங்களா தீர்க்கமுடியாத மர்மம்!

 மனித நாகரிக வரலாற்றில் இன்று வரை நம்மை வியப்பில் ஆழ்த்தும் கட்டிடங்களாக எகிப்து பிரமிடுகள் திகழ்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் இந்தப் பிரமிடுகள், அந்நாட்டு அரசர்களின் சக்தி, அறிவியல் அறிவு, ஆன்மீக நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக Giza Pyramids உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.




பண்டைய எகிப்தில் இறந்த அரசர்களோட உடலை பாதுகாக்க கட்டப்பட்ட கல்லறை தான் இந்த பிரமீடுகள் . மறுமை மேல அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்த ராஜாக்கள் தங்களோட உடலை பாதுகாக்க உருவாகின கட்டமைப்பு தான் இவை.பாரவோக்கள் தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதியதால், மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை தொடரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், உடல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரமிடுகள் கட்டப்பட்டன.


எகிப்தில் பல பிரமிடுகள் இருந்தாலும், கீசா பகுதி மிகப் புகழ்பெற்றது. இங்கு மூன்று முக்கிய பிரமிடுகள் உள்ளன:

  1. Great Pyramid of Giza – பாரவோ Khufu கட்டிய இந்தப் பிரமிடம் உலகின் ஏழு பழமையான அதிசயங்களில் ஒன்றாகும்.
  2. Pyramid of Khafre – பாரவோ Khafre ஆட்சியில் கட்டப்பட்டது.
  3. Pyramid of Menkaure – அளவில் சிறியதாக இருந்தாலும், கலைநயத்தில் சிறப்புடையது.

இந்த மூன்று பிரமிடுகளும் சுமார் கிமு 2600–2500 காலகட்டத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எகிப்தில் பல பிரமிட்கள் கட்டப்பட்டிருந்தாலும் கிமு 2580 இல் பாரோ khufu கட்டப்பட்ட கிரேட் பிரமிட் காசா தன நம்மள இன்னும் பிரமிப்படைய செய்யுது ,4500 ஆண்டுகளுக்கு முன்னால கட்டப்பட்ட இந்த பிரமிடோட உயரம் மட்டும் 139 மீட்டர் .2 லிருந்து 15 தந் வரை டை உடைய 23 லட்சம் கற்களை கொண்டுதான் இந்த பிரமிட் கட்டப்பட்டிருக்கு ,இரும்பு சிமெண்ட் இல்லாமால் கட்டப்பட்ட உலகத்திலேயே மிகப்பெரிய கட்டமைப்பு இதுதான் .

பிரமிடுகள் கட்டப்பட்ட முறை இன்றும் பல கேள்விகளை எழுப்புகிறது. பல டன் எடையுள்ள கற்கள் எவ்வாறு வெட்டப்பட்டன? அவற்றை நூற்றுக்கணக்கான அடி உயரத்திற்கு எப்படிக் கொண்டு சென்றனர்? அக்காலத்தில் நவீன இயந்திரங்கள் இல்லாத நிலையில், மனித உழைப்பு, மரக் கட்டைகள், சாய்வு மேடைகள் (ramps) ஆகியவற்றை பயன்படுத்தி இந்தப் பெரும் பணிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் முழுமையான விளக்கம் இன்னும் மர்மமாகவே உள்ளது.


எகிப்து மன்னர்கள் நட்சத்திரத்தை அடிப்படையை வைத்துதான் இந்த பிரமிடுகளை அமைத்ததா சொல்லபபடுகிறது .பிரமிடுகள் வெறும் கல்லறைகள் மட்டுமல்ல; அவை எகிப்தியர்களின் கணித, வானியல் அறிவின் சான்றுகளாகவும் உள்ளன. Great Pyramid வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளுக்கு மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும், சில ஆய்வுகளின்படி, நட்சத்திரங்களின் இயக்கத்தோடு தொடர்புடைய வகையில் பிரமிடுகளின் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


GPS போன்ற எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்துல பிரமிட் கள் சரியா வட துருவத்தை நோக்கி கட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு .நவீன அறிவியலுக்கு சவால் விடுஅளவுக்கு இன்றும் நிமிர்ந்து நிற்கிறது எகிப்திய பிரமிட்கள்


தொடரும்.....

Post a Comment

Previous Post Next Post